Loading...
போரினால் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படும் அமெரிக்க கடற்படை வீரர்கள்: மாற்று வீரர்களை களமிறக்கும் புதிய போர்க்கப்பல்
ஜப்பான் வழியே மத்திய கிழக்கு நோக்கி நகரும் USS ஜார்ஜ் வாஷிங்டன்

போரினால் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படும் அமெரிக்க கடற்படை வீரர்கள்: மாற்று வீரர்களை களமிறக்கும் புதிய போர்க்கப்பல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2026
02:01 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து ரோந்துபணியில் ஈடுபட்டு வரும் விமான தாங்கிப் போர்க்கப்பலுக்கு பதிலாக, USS ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பலை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்களின்படி, இது முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு வழக்கமான சுழற்சி முறை மாற்றம் தான் என்றும், சமீபத்தில் லிங்கன் போர்க்கப்பலில் நிலவி வரும் அசாதாரண சூழல்களுக்கான நேரடிப் பதில் நடவடிக்கை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் அவதி

250 நாட்களாக கடலிலேயே மிதக்கும் கப்பல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயணத்தை தொடங்கிய 'USS ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பல், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் பியூரி' தாக்குதல்கள் மற்றும் துறைமுக முற்றுகை நடவடிக்கைகளுக்காக மத்திய கிழக்கு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.

தொடர்ந்து 250 நாட்களுக்கும் மேலாக கடலிலேயே இருக்கும் இக்கப்பல், 200 நாட்களாக எந்தவொரு துறைமுகத்திலும் நிற்காமல் தொடர்ந்து பயணித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

ஆனால், இந்தத் தொடர் பணி கடற்படை வீரர்களின் மனநலனை கடுமையாக பாதித்துள்ளது.

மன அழுத்தம்

அடிப்படை வசதிகள் இன்றி மன உளைச்சலில் வீரர்கள்

லிங்கன் போர்க்கப்பலில் உள்ள வீரர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்-க்கு எழுதிய கடிதத்தில் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தொடர் பணிச் சுமையால் பல வீரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடிநீர் மாசுபாடு, கழிப்பறை மற்றும் குழாய் அமைப்புகளில் கோளாறுகள், அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகிறது.

வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட அன்புப் பொட்டலங்கள் மாதக்கணக்கில் போய்ச் சேராமல் முடங்கியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க பென்டகன் மற்றும் நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்போவதாக இந்தியானா பிரதிநிதி மார்லின் ஸ்டட்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

USS ஜார்ஜ் வாஷிங்டன்

ஜப்பான் வழியே மத்திய கிழக்கு நோக்கி நகரும் USS ஜார்ஜ் வாஷிங்டன்

தற்போது ஜப்பானை மையமாக கொண்டு பசிபிக் பெருங்கடலில் இயங்கி வந்த USS ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல், வழிகாட்டி ஏவுகணை அழிப்புக் கப்பல்களுடன் மலாக்கா நீரிணையை கடந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது விரைவில் மத்திய கிழக்கைச் சென்றடைந்து லிங்கன் போர்க்கப்பலின் பொறுப்புகளைத் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT