Page Loader
கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம்
கர்ப்பமானதால் வேலையை விட்டு நீக்கப்பட்ட பெண்

கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம்

எழுதியவர் Nivetha P
Dec 31, 2022
06:32 pm

செய்தி முன்னோட்டம்

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரிந்து சம்பாதித்து வருகிறார்கள். எனினும், ஒரு பெண் கர்ப்பமுற்றால் அவரை வேலையை விட்டு நீக்குவதிலேயே தான் பெரும்பாலான நிறுவனங்கள் உள்ளன. இவர்களுக்கு பிரசவ விடுமுறை அளிக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, தங்களுக்கு தேவையான வேலைகளை கர்ப்பமுற்ற பெண் செய்ய இயலாது என்பதே இவர்களது எண்ணமாக உள்ளது. இந்நிலையில் பிரிட்டைனில் எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் சார்லோஸ் என்னும் பெண்மணி பணிபுரிந்து வந்துள்ளார். 34 வயதாகும் இவருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே 3 முறை கரு கலைந்துள்ளது குறிப்பிடவேண்டியவை.

ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவு

தன்னுடைய இந்த நிலைமைக்கு அந்நிறுவனம் தான் காரணம் என்று வழக்கு தொடர்ந்த பெண்மணி

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான அந்த பெண் தனது மேனேஜரிடம் சென்று தன் மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது மேனேஜர், "நீங்கள் பணிக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகிறது. அதனால் உங்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க முடியாது" என்று கூறியதோடு, அந்த பெண்ணை வேலையை விட்டு நீக்கியும் உள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண்ணிற்கு மீண்டும் நான்காவது முறையாக கரு கலந்துள்ளது. தனது இந்த நிலைமைக்கு அந்நிறுவனம் தான் காரணம் என, அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "ஒரு பெண் கர்ப்பமான ஒரே காரணத்திற்காக அவரை பணியை விட்டு நீக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி, சார்லோஸிற்கு 15 லட்சத்தை இழப்பீடாக வழங்ககோரி நீதிமன்றம் தீர்ப்பினை அளித்துள்ளது.