அடுத்த செய்திக் கட்டுரை

லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம்
எழுதியவர்
Nivetha P
Mar 01, 2023
04:30 pm
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட், 41 வயதாகும் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை படம்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி சமீபத்தில் இவர் இங்கிலாந்து சதர்லாந்து பகுதியிலுள்ள கடலுக்கு சென்று பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படங்களை பார்த்த அவர் மிகுந்த ஆச்சரியமடைந்துள்ளார்.
கலங்கரை விளக்கத்தில் மனித முகம் போன்ற அமைப்பில் கடல் அலை மோதி சிதறுவது போன்ற புகைப்படம் ஒன்று அதில் பதிவாகியிருந்தது.
இந்த புகைப்படத்தினை அவர் இணையத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது