Page Loader
இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா?
விசா கட்டண உயர்வின் மூலம் இந்தியர்களின் இங்கிலாந்து பயண செலவுகளும் உயரும்

இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா?

எழுதியவர் Srinath r
Oct 04, 2023
12:29 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து அரசு அறிவித்திருந்த விசா கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது. இந்திய மதிப்பில் ₹ 1,500 முதல் ₹ 129,000 வரை விசா கட்டணம் உயர்வு இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம், 6 மாதம் முதல் 11 மாதங்கள் வரையிலான குறுகிய கால படிப்புகளுக்கு விசா கட்டணம் உயர்த்தப்படவில்லை. "விசா கட்டணத்தை உயர்த்தி இருப்பது நியாயமானதும், சரியானதுமாகும். இதன் மூலம் எங்களால் பல முக்கிய துறைகளுக்கு நிதியளிக்க முடியும்" என அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

2nd card

உயிரும் கல்வி, திறமையான தொழிலாளர்கள்(Skilled immigrants) விசா கட்டணங்கள்

இந்த கட்டண உயர்வின் மூலம் மாணவர்களுக்கான கல்வி விசா கட்டணமும் உயர்கிறது. மாணவர்களின் கல்விக்கான விசா கட்டணம் 127 பிரிட்டானிய பவுண்டுகள்(ஜிபிபி) உயர்கிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ₹12,750 ஆகும். பார்வையாளர் விசா(visit visa) 15 பிரிட்டானிய பவுண்டுகள் உயர்கிறது. இந்திய மதிப்பில் ₹1,500 ஆகும். மேலும் குடும்ப மற்றும் குடியுரிமை விசாக்களின் கட்டணமும் 20% உயர்கிறது. திறமையான தொழிலாளர்களுக்கு(Skilled immigrants) மூன்று வருடத்திற்கு குறைவான ஸ்பான்சர்சிப் வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஜிபிபி 719 ≈(₹65,000) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடத்திற்கு மேல் ஸ்பான்சர்ஷிப் உள்ளவர்களுக்கு ஜிபிபி 1,420 ≈(₹ 129,000) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர பற்றாக்குறை தொழில்களில் திறமையான தொழிலாளர்களுக்கான விசா கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.