'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு
ஆப்ரிக்கா நாட்டில், லுகாசாவில் உள்ள புகிசா என்னும் நகரத்தில் மூஸா ஹசாயா என்பவர் வசித்து வருகிறார். 67 வயதாகும் இவருக்கு 12 மனைவிகள், 102 பிள்ளைகள், 568 பேரன்-பேத்திகள் உள்ளனர். கடந்த 1971ம் ஆண்டு பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி, 16 வயதில் தனது முதல் திருமணத்தை செய்துள்ளார் மூஸா. திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகே இவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது, அதன் பின் தொடர்ச்சியாக அவர் 11 திருமணங்களை செய்துள்ளார். அவரின் ஒவ்வொரு மனைவிக்கும் 8 முதல் 10 குழந்தைகள் வரை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மூஸாவிற்கு வருமானம் குறைவாக இருந்ததையடுத்து, அவரது 2 மனைவிகள் அவரை விட்டு சென்று விட்டார்களாம்.
'நிறைய சொத்துக்கள் இருந்தால் 4க்கும் மேற்பட்ட திருமணங்களை செய்யுங்கள்'-அறிவுறுத்தும் மூஸா
மேலும், வாழ்வாதார செலவு அதிகரித்து கொண்டே போகும் காரணத்தினால், தன்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் 'இதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள போவதில்லை' என்று மூஸா தெரிவித்துள்ளார். இது குறித்து மூஸா ஹசாயா "செலவுகள் அதிகரித்த நிலையில், வருமானம் குறைந்து விட்டது. என்னால் குடும்பத்தில் உள்ளோர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, இனி குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார். அதோடு 4 திருமணங்களுக்கு மேல் செய்ய விரும்புவோர் போதுமான சொத்துக்கள் இல்லாமல் திருமணம் செய்யவேண்டாம் என்று கூறியிருக்கிறார். எனக்கு நிறைய சொத்துக்கள் இருந்ததால் அதிக திருமணம் செய்ததாக என்றும் தெரிவித்துள்ளார். உகாண்டாவில் ஒரு ஆண் 1க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.