
இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண்
செய்தி முன்னோட்டம்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு துருக்கிய பெண் இந்திய இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த படத்தில் இருக்கும் ராணுவ அதிகாரியின் பெயர் மேஜர் பினா திவாரி என கூறப்படுகிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பினா திவாரி அங்குள்ள மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
படத்தில், துருக்கிய பெண் ஒருவர் மேஜர் பினா திவாரியை கட்டிப்பிடித்து முத்தமிடுவதைக் காணலாம். இந்த படத்தை இந்திய ராணுவமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
'ஆபரேஷன் தோஸ்த்' என்பதன் கீழ் இந்திய NDRF அதிகாரிகள் துருக்கியில் உதவி செய்து வருகிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி வரும் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பதிவு
#OperationDost
— ADG PI - INDIAN ARMY (@adgpi) February 9, 2023
We Care.#IndianArmy#Türkiye pic.twitter.com/WoV3NhOYap