Loading...
இந்தியாவிற்கு மற்றொரு சர்வதேச பெருமை! பிரான்சின் உயரிய விருதைப் பெறுகிறார் ஏர்டெல் சுனில் பாரதி மிட்டல்
பிரான்சின் உயரிய விருதைப் பெறுகிறார் ஏர்டெல் சுனில் பாரதி மிட்டல்

இந்தியாவிற்கு மற்றொரு சர்வதேச பெருமை! பிரான்சின் உயரிய விருதைப் பெறுகிறார் ஏர்டெல் சுனில் பாரதி மிட்டல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
08:11 pm

செய்தி முன்னோட்டம்

பாரதி என்டர்பிரைசஸ் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சுனில் பாரதி மிட்டலுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய தேசிய விருதான தேசிய லெஜியன் ஆஃப் ஆனர் விருதின் செவாலியர் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறையில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தியதற்காக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மூலம் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் அக்டோபர் 28 அன்று இவ்விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

சேவை 

34 ஆண்டுகாலப் பிரான்ஸ் கூட்டாண்மை மற்றும் சேவை

விருது குறித்து சுனில் மிட்டல் கூறுகையில், 1992 ஆம் ஆண்டில் ஏர்டெல் தொடங்கப்பட்ட காலத்தில் பிரான்சின் காம்பெக்னி ஜெனரல் டெஸ் ஈக்ஸ் நிறுவனத்துடன் இணைந்தபோது தனது பிரான்ஸ் உடனான தொடர்பு தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

தற்போது ஐரோப்பாவின் முக்கிய செயற்கைக்கோள் சேவை அமைப்பான யூட்டல்சாட் நிறுவனத்தின் இணைத் தலைவராக இருந்து தனது கூட்டாண்மையைத் தொடர்வதாகத் தெரிவித்தார்.

விண்வெளி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட இவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனப் பிரெஞ்சுத் தூதர் பாராட்டியுள்ளார்.

லெஜியன் ஆஃப் ஆனர்

என்ன இந்த லெஜியன் ஆஃப் ஆனர் விருது?

பிரெஞ்சு குடியரசின் மிக உயரிய தேசிய விருதான லெஜியன் ஆஃப் ஆனர் 1802 ஆம் ஆண்டு நெப்போலியன் போனபார்ட்டால் உருவாக்கப்பட்டது.

ராணுவம் மற்றும் சிவில் துறைகளில் சிறப்பான சேவையாற்றிய பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இதில் செவாலியர், ஆஃபிசியர், கமாண்டர், கிராண்ட் ஆஃபிசியர் மற்றும் கிராண்ட் கிராஸ் ஆகிய 5 நிலைகள் உள்ளன.

சுனில் மிட்டலுக்கு இதன் முதல் நிலையான செவாலியர் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரபலங்கள்

முன்பு விருது பெற்ற பிற முக்கிய இந்தியப் பிரபலங்கள்

சுனில் மிட்டலுக்கு முன்பாக இந்தியாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் (2007) மற்றும் ஷாருக் கான் (2014) ஆகியோர் இந்திய சினிமா பங்களிப்பிற்காக இவ்விருதைப் பெற்றனர்.

பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா (2016) மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் அரோரா (2016) ஆகியோரும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

மேலும் சுனில் மிட்டல் 2024-இல் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் 'KBE' விருதையும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT