34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா
மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, அமெரிக்க சந்தையில் இருக்கும் 34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது. டிஸ்ஸோலுஷன் சோதனையில் அந்த மருந்துகள் தோல்வியடைந்ததே இதற்கு காரணமாகும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டில்டியாசெம் ஹைட்ரோகுளோரைடு-வெளியீட்டு காப்ஸ்யூல்களை, சன் பார்மாவின் அமெரிக்க பிரிவு திரும்பப் பெறுகிறது. நியூ ஜெர்சியை(பிரின்ஸ்டன்) சார்ந்த சன் பார்மா, "தோல்வியடைந்த இம்ப்யூரிட்டி(டீசெடைல் டில்டியாசெம் ஹைட்ரோகுளோரைடு) மற்றும் தோல்வியடைந்த டிஸ்ஸோலுஷன் சோதனைகளின் காரணமாக" அந்த மருந்து பேட்ச்சை திரும்ப பெறுகிறது. மும்பையை மையமாக கொண்ட இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம், குஜராத்தில் உள்ள அதன் ஹலோல்-அடிப்படையிலான உற்பத்தி ஆலையில் இந்த பொருட்களை தயாரித்ததுள்ளது.
இந்திய இருமல் மருந்துகள் மற்றும் கண் மருந்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள்
குஜராத்தில் தயாரிக்கப்பட்ட அந்த மருந்துகள் அமெரிக்காவை மையமாக கொண்ட யூனிட்டால் சந்தையில் விநியோகிக்கப்பட்டது. சன் பார்மா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி-13அன்று வகுப்பு-II நாடு தழுவிய(அமெரிக்கா) திரும்ப பெறுதலை தொடங்கியது. வகுப்பு-II திரும்ப பெறுதல் என்பது மருந்துகளால் சரி செய்யப்பட கூடிய உடல் கோளாறுகளை ஏற்படுத்தும் மருந்து அவசரநிலைக்கு அழைப்பு விடுப்பதாகும். அதாவது, சன் பார்மா திரும்ப பெறும் மருந்துகளால் தற்காலிக அல்லது மருத்துவரீதியாக சரிசெய்யக்கூடிய உடல் கோளாறுகள் ஏற்படலாம் என்பதாகும். ஏற்கனவே, இந்தியாவில் உற்பத்தி செய்த இருமல் மருந்துகள் மற்றும் கண் மருந்துகளால் உலக அளவில் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மிகபெரும் மருந்து நிறுவனமான சன் பார்மா மருந்தை திரும்ப பெற இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.