
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தி குத்து
செய்தி முன்னோட்டம்
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே-மியுங் செவ்வாயன்று தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார்.
புதிதாக கட்டப்பட இருக்கும் விமான நிலையத்தை சுற்றிப்பார்க்க லீ ஜே-மியுங் பூசானுக்கு சென்றிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லீ ஜே-மியுங்கின் இடது கழுத்தில் கத்தியால் குத்தினார்.
அந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர், லீயின் பெயர் பொறிக்கப்பட்ட காகித கிரீடத்தை அணிந்திருந்த 50 அல்லது 60 வயதுமதிக்கத்தக்க நபர் ஆவார்.
ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களின் கூட்டத்திற்கு மத்தியில் லீ ஜே-மியுங் நின்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
டிஜிவ்ன்
லீ ஜே-மியுங் மருத்துவமனையில் அனுமதி
அப்போது, ஆட்டோகிராப் பெற வேண்டும் என்று கூறி அவரை நெருங்கிய அந்த அடையாளம் தெரியாத நபர், லீ ஜே-மியுங்கின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
எனவே, அந்த சம்பவத்தின் போது, செய்தியாளர்கள் எடுத்த விடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவரால் கத்தியால் குத்தப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுவதைக் காட்டுகிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, லீ ஜே-மியுங் உடனடியாக மருத்துவ கவனிப்புக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்தி குத்து
BREAKING: South Korean opposition leader Lee Jae-myung has been stabbed in the neck
— Benny Johnson (@bennyjohnson) January 2, 2024
https://t.co/6uMGtTkYfr