சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்
செய்தி முன்னோட்டம்
மே 30அன்று அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரின் தனியார் குடியிருப்பு சொத்துகள் தான் தற்போது ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே அதிக விலை உயர்ந்ததாக உள்ளது.
இதற்கு முன், ஹாங்காங் SAR நகரம் தான் மிக விலையுயர்ந்த தனியார் வீடுகளை கொண்டிருந்தது. தற்போது, சிங்கப்பூர் ஹாங்காங்கை விஞ்சி இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் ஒரு வீட்டின் சராசரி விலை US$1.2 மில்லியனை(சுமார் 9 கோடி ரூபாய்) தாண்டியுள்ளது.
மேலும், வாடகை வீடுகளின் விலையும் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் உள்ள வாடகை வீடுகளின் சராசரி மாத வாடகை US$2,600ஆக(சுமார் 2 லட்சம்) உள்ளது. இது முன்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.
details
சிங்கப்பூரில் 90 சதவீத பேரிடம் சொந்தமாக வீடு இருக்கிறது
சிங்கப்பூரில் உள்ள குடியிருப்பாளர்கள் 90 சதவீத பேரிடம் சொந்தமாக வீடு இருக்கிறது. டோக்கியோ, ஷாங்காய் மற்றும் சியோல் போன்ற ஆசிய பெரு நகரங்களுடன் ஒப்பிடும் போது, இந்த விஷயத்தில் சிங்கப்பூரின் சதவீதம் மிக அதிகமாகும்.
1960களில் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற ஆரம்ப ஆண்டுகளில் இருந்து நியாயமான விலையில் தங்கள் குடிமக்களுக்கு வீடுகளை சொந்தமாக்க வேண்டும் என்று செயல்பட்டு வந்த சிங்கப்பூர் அரசாங்கத்தின் உறுதியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூருக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், இளைஞர்கள் அதிகமாக தங்கள் பெற்றோர்களின் வீட்டை விட்டு வெளியேறுவதாலும், கொரோனா ஊரடங்கினால் புதிய வீட்டுவசதிகள் குறைந்துள்ளதாலும் சிங்கப்பூர் வீடுகளின் விலை அதிகரித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.