காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனை சேர்ந்த காலிஸ்தான் விடுதலைப் படையின்(KLF) தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் முக்கிய அடியாளுமான அவதார் சிங் கந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்.
அம்ரித்பால் சிங் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க உதவிய அவதார் சிங்கிற்கு விஷம் வைக்கப்பயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தப்பியோடிய அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் வலை வீசி தேடி வந்தனர். ஆனால், 37 நாட்களுக்கு அவரை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.
இந்த பிரிவினைவாத கூட்டத்தின் தலைவர் தான் அம்ரித்பால் சிங் ஆவர். இவர் சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பிஜேபி
KLF பயங்கரவாதி குல்வந்த் சிங்கின் மகன் அவதார் சிங்
இந்நிலையில், அம்ரித்பாலின் முக்கியமான அடியாளான அவதார் சிங் கந்தா உயிரிழந்துள்ளார்.
மேலும், இவருக்கு இரத்த புற்றுநோய் இருந்ததாக அவரது மருத்துவ பதிவுகள் கூறுகின்றன.
மார்ச்-19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது இந்தியக் கொடி அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியது வெடிகுண்டு நிபுணரான அவதார் சிங் கந்தா தான் என்று கூறப்படுகிறது.
இந்திய கொடி அகற்றப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியாக காந்தாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) கூறியுள்ளது.
அவதார் சிங் கந்தா, இதற்கு முன் கொல்லப்பட்ட KLF பயங்கரவாதி குல்வந்த் சிங்கின் மகன் ஆவார்.
2007ஆம் ஆண்டு படிப்பு விசாவில் இங்கிலாந்து சென்ற இவர், காலிஸ்தான் ஆதரவு கூட்டத்தின் மிக முக்கிய தலைவராக கருதப்படுகிறார்.