375 ஆண்டுகளாக தொலைந்திருந்த பூமியின் எட்டாம் கண்டத்தின் வரைபடத்தை மறு வரையறை செய்துள்ள விஞ்ஞானிகள்
ஜிலாண்டியா என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்டம், நியூசிலாந்து நாட்டைப் போல சில தீவுகளைஉள்ளடக்கியது. மேலும் 94% நீருக்குள் மூழ்கியுள்ளது. கிட்டத்தட்ட 375 ஆண்டுகளுக்குப் பின், மறைந்திருந்த இந்த கண்டத்தின் வரைபடத்தை புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு ஆய்வாளர்களால்(Seismologists) மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. பிபிசியின் தகவலின்படி, ஜிலாண்டியா 1.89 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. எனினும், இது மடகாஸ்கரை போன்று ஆறு மடங்கு பெரியது எனவும் கூறப்படுகிறது. ஜிலாண்டியா கண்டம் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகவும் இளமையான, சிறிய மற்றும் லேசான கண்டம் எனக் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் ஜிலாண்டியா குறித்து ஆராய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், கடலுக்கு அடியில் இருந்து கற்களை சேகரித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.