LOADING...
தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா
ஈரான் ஏவுகணைகளை தாக்கி அழித்த சவுதி அரேபியா

தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
01:30 pm

செய்தி முன்னோட்டம்

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. புதன்கிழமை அதிகாலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானால் ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஆறு ஏவுகணைகள் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கியும், மற்றொன்று கிழக்கு மாகாணத்தை நோக்கியும் ஏவப்பட்டவை. இது தவிர, ஷய்பா எண்ணெய் வயல் மற்றும் அல்-கர்ஜ் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து வந்த 16 ட்ரோன்களையும் (Drones) பாதுகாப்பு அமைச்சகம் இடைமறித்து அழித்துள்ளது.

போர்

கண்டனங்களைத் தெரிவித்த சவுதி அரேபியா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல்களை சவுதி அமைச்சரவை வன்மையாகக் கண்டித்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சவுதி அரேபியாவுக்கு உரிமை உள்ளது என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தப் போர் தொடர்ந்து நீடித்தால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் எச்சரித்துள்ளார்.

Advertisement