ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் மிகைல் அப்தால்கின் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. ரஷ்ய மொழியில் "நூடுல்ஸை காதுகளில் தொங்கவிடுவது" என்று கூறினால் "காதில் பூ சுற்றுவது" என்ற ஒரு அர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது யாரோ ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றுகிறார் என்ற பொருள்படுகிறதாம். அப்படி இருக்கையில், அதிபர் புதின் உக்ரைன் படையெடுப்பை பற்றி உரையாற்றி கொண்டிருக்கும் போது, அதிபரை நக்கல் செய்யும் நோக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நூடுல்ஸை காதில் தொங்கவிட்டு கொண்டு உரையை கவனிப்பது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதை எதிர்த்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.