Loading...
ரியாத் விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணைத் தாக்குதல்! 242 விமானங்கள் ரத்து
ரியாத் விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணைத் தாக்குதல்

ரியாத் விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணைத் தாக்குதல்! 242 விமானங்கள் ரத்து

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2026
08:23 pm

செய்தி முன்னோட்டம்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் நேரடி பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய வளாகம் முழுவதும் உடனடியாக காலி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக சவுதி வான்வழி உள்கட்டமைப்புகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கள நிலவரம்

அதிரவைக்கும் கள நிலவரம்

தாக்குதல் நடந்தத்தைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு ஏராளமான அவசர மருத்துவ ஆம்புலன்ஸ்களும், ஹெலிகாப்டர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்திற்குள் இருந்த பயணிகள் "எங்கு பார்த்தாலும் ரத்தக் கறைகளாகக் காணப்படுகிறது" என அதிர்ச்சியளிக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையை சவுதி அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

விமான சேவைகள் முடக்கம்

242 விமானங்கள் ரத்து; 230 விமானங்கள் தாமதம்

சவுதியின் மிக முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இதுவரை 242 விமானங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 230 விமானங்கள் காலவரையின்றி தாமதமாக இயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக பயணிகள் அனைவரும் தங்களது விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு பயண சீட்டின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எச்சரிக்கை

அதிகரிக்கும் பிராந்தியப் பதற்றம் மற்றும் ஹூதிகளின் எச்சரிக்கை

கடந்த அக்டோபர் 8 அன்று இதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் விமானி ஹமூத் அலி உட்பட 3 சவுதி குடிமக்கள் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுதி வான்வெளியை போர் மண்டலமாக அறிவித்துள்ள ஹூதி அமைப்பு, அங்கு இயங்கும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஏமனில் தொடரும் தீவிர போர் நடவடிக்கைகளே எல்லை தாண்டிய இந்தத் தாக்குதல்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது.

ADVERTISEMENT