மாலத்தீவுகள் அதிபர் தேர்தல்- சீனா ஆதரவு வேட்பாளர் முகமது முய்சு வெற்றி
செய்தி முன்னோட்டம்
மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான முகமது முய்சு 54% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் இந்த தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முகமது முய்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாலத்தீவுகள் தலைநகர் மாலே நகரின் மேயரான முகமது முய்சு " இந்தியா வெளியேறு"( India out)" என்ற தலைப்பில் தன் பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோலிஹ் அதிபர் பொறுப்பில் இருந்தபோது மாலத்தீவுகள்- இந்தியா இடையே உறவுகளை வலுப்படுத்தினார். அவர் "இந்தியா முதல்"(India- First)" என்ற கொள்கையை கடைப்பிடித்தார்.
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுகளில் சீன ஆதரவாளர் அதிபராக வென்று இருப்பது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
அதிபர் தேர்தலில் இந்திய ஆதரவு வேட்பாளர் தோல்வி
🇲🇻 Historic Election in Maldives!
— WE News English (@WENewsEnglish) October 1, 2023
▪️ Opposition candidate Mohamed Muizzu wins presidential race with over 54% of the vote.
▪️ Ibrahim Solih graciously accepts defeat, congratulates Muizzu on social media.
▪️ Maldivians turn out in thousands across polling stations worldwide.… pic.twitter.com/cMnQyeiyVK