மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி
கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் உருக்குலைந்த உக்ரைன் ஏராளமான பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களையும் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகரமான கீவ், மக்கள் வாழ தகுதியற்ற இடம் என்று உலக நாடுகள் சொல்லும் அளவிற்கு நிலைமை அங்கு மோசமாக மாறியுள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்புகள் அனைத்தும் ரஷ்யாவால் தாக்கப்பட்டது. இதனால் அங்குள்ள நகரம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதாக முன்னதாகவே உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார். மேலும் 45 லட்சம் பொதுமக்கள் போதிய உணவு இல்லாமல் தவிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
இருளில் மூழ்கிய 9 மில்லியன் உக்ரேனிய மக்கள்
அதிகாரப் போட்டிக்காக துவங்கிய இந்த தாக்குதலால் பெரும் பொருட் சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்களே இதில் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில் ஜெலன்ஸ்கி சமீபத்தில் இரவில் எடுக்கப்பட்ட வீடியோ உரையில், "ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு கிறிஸ்துமஸ் பாண்டிகையொட்டி மின் உற்பத்தி நிலையங்களை சீர் செய்யும் பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்ட நிலையிலும் சிக்கல்கள் எதுவும் சரியாகாமல் தொடர்கிறது. இயற்கையாகவே பற்றாக்குறையும், மின் தடையும் நீடிக்கிறது. இன்று மாலை நிலவரப்படி, உக்ரைனில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி அவதிக்குள்ளாகி வருகிறார்கள்" என்று கூறியுள்ளார். போர் முடிவிற்கு வந்தாலும், உக்ரைன் பழைய நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளார்கள்.