Loading...
உக்ரைன் போரை முடிக்க எதையும் செய்ய இந்தியா தயார்: புடினிடம் பிரதமர் மோடி உறுதி
SCO) உச்சிமாநாட்டின் போது, இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்

உக்ரைன் போரை முடிக்க எதையும் செய்ய இந்தியா தயார்: புடினிடம் பிரதமர் மோடி உறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
07:35 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க சாத்தியமான மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு புடின் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திப்பூர்வ உறவும் கூட்டுறவும் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் போது, இரு தலைவர்களும் சந்தித்த விவரங்களை வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

"முடிவில்லாப் போரிலிருந்து... போரின் முடிவை நோக்கி!"

சந்திப்பின் போது உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி பேசிய முக்கிய அம்சங்கள்:

"காந்தி மற்றும் புத்தர் பிறந்த மண்ணிலிருந்து ஒரே ஒரு செய்தி மட்டுமே உதிக்க முடியும்; அது அமைதியின் பாதை மட்டுமே."

"போரில் கழிக்கும் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தைப் பின்னோக்கித் தள்ளுகிறது. முடிவில்லாப் போரிலிருந்து விலகி, போரின் முடிவை நோக்கி நாம் நகர வேண்டும்."

உக்ரைன் மோதலால் உலகளாவிய அளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், இந்தப் பிரச்சினைக்கு தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும் என மோடி வலியுறுத்தினார்.

ADVERTISEMENT