Page Loader
உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில்
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட சூரியன்

உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில்

எழுதியவர் Sindhuja SM
Feb 10, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

சூரியனின் ஒரு பெரிய பகுதி உடைந்து அதன் வட துருவத்தில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது எதனால் நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்காக வெளியிடப்பட்ட வீடியோ தற்போது விண்வெளி சமூகத்தை திகைக்க வைத்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டது. மேலும், இதை கடந்த வாரம் விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளரான டாக்டர் தமிதா ஸ்கோவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சூரியன், சூரிய எரிப்புகளை வெளியிடுவது தெரிகிறது, இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளை பாதிக்க கூடியது. எனவே, இதில் அடுத்து என்ன நடக்கும் என்பதை விஞ்ஞானிகள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

டாக்டர் தமிதா ஸ்கோவ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ