Loading...
சுதந்திர தின உரையில் அமெரிக்க அதிபருக்கு புகழாரம்! பாகிஸ்தானின் அடிமைத்தன மனநிலை என விமர்சனம்: ஷெபாஸ் ஷெரீப் பேச்சால் சர்ச்சை
சுதந்திர தின உரையில் அமெரிக்க அதிபருக்கு புகழாரம் சூட்டிய பாகிஸ்தான் பிரதமர்

சுதந்திர தின உரையில் அமெரிக்க அதிபருக்கு புகழாரம்! பாகிஸ்தானின் அடிமைத்தன மனநிலை என விமர்சனம்: ஷெபாஸ் ஷெரீப் பேச்சால் சர்ச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
08:05 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் 80வது சுதந்திர தின உரையில் அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குத் திடீரென நன்றி தெரிவித்துப் புகழாரம் சூட்டியுள்ளது பாகிஸ்தானின் மாறாத அடிமைத்தன மனநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது, அதிபர் டிரம்ப் தலையிட்டு செயல்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமே லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியது எனக் கூறி அவர் நன்றி தெரிவித்தார். நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை குறித்துப் பேச வேண்டிய நாளில் வெளிநாட்டு அதிபரை அவர் புகழ்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த நேரடி எச்சரிக்கை

சுதந்திர தின உரையில் இந்தியாவின் சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையைக் கடுமையாக விமரிசித்த ஷெபாஸ் ஷெரீப், நாட்டின் நீர் ஆதாரம் பாகிஸ்தானின் சிவப்புக் கோடு எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானிற்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டால் அதற்கு நேரடிப் பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்துள்ள நிலையில், நீர் விவகாரத்தில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் அலுவலக எக்ஸ் தளப் பக்கத்திலும் திட்டவட்டமாகப் பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய எதிர்ப்பு

உள்நாட்டுத் தோல்விகளை மறைக்கப் பாயும் இந்திய எதிர்ப்பு

கைபர் பக்துன்க்வாவில் தீவிரமடைந்து வரும் பயங்கரவாதம், பலுசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறைவாசம் எனப் பாகிஸ்தான் பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.

இத்தகைய சொந்த நாட்டுத் தோல்விகளை எதிர்கொண்டு தீர்வு காண்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வழக்கம்போல இந்தியாவை அமைதியின் எதிரி என சித்தரித்துத் தனது நாட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறார் எனப் பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ADVERTISEMENT

இந்தியாவின் பதிலடி

இந்தியாவின் தெளிவான பதிலடியும் இறுக்கமான நிலைப்பாடும்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தது.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளித்து வரும் ஆதரவை முழுமையாகவும் நம்பகத்தன்மையுடனும் நிறுத்தும் வரை இந்த ஒப்பந்த இடைநிறுத்தம் தொடரும் என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த சுதந்திர தின பேச்சு வெறும் அரசியல் நாடகமே தவிர, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு நிலைப் பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ராஜதந்திர வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT