LOADING...
கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
ISPR டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அஹமத் ஷெரீஃப் சௌத்ரி

கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி

எழுதியவர் Venkatalakshmi V
Dec 10, 2025
08:48 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான கேள்வியின்போது, ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ISPR) டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அஹமத் ஷெரீஃப் சௌத்ரி. ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, பத்திரிகையாளர் அப்சா கோமால், சிறையில் உள்ள இம்ரான் கான் ஒரு "தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்" மற்றும் "தேசத்திற்கு விரோதமானவர்" என்று சௌத்ரி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலளித்த சௌத்ரி, "இம்ரான் கான் ஒரு 'மன நோயாளி' என்ற நான்காவது குற்றச்சாட்டையும் சேர்த்துக்கொள்" என்று கூறிவிட்டு, பின்னர் சிரித்தபடி பத்திரிகையாளரை பார்த்து கண் சிமிட்டினார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எதிர்ப்பு

எதிர்ப்பும் பின்னடைவும்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உடனடியாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீருடையில் உள்ள ஒரு உயர் அதிகாரி இவ்வாறு பொதுவெளியில் கண் சிமிட்டியது "தொழில்முறை அல்லாத செயல்" மற்றும் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பல பயனர்கள் விமர்சித்துள்ளனர். ராணுவத் தலைவர் ஆசிம் முனீர் ஒரு "மனநிலை சரியில்லாதவர்" என்று இம்ரான் கான் குற்றம் சாட்டியதற்கு பதிலடியாக, முன்னாள் பிரதமரை சௌத்ரி கடுமையாக விமர்சித்தார். 2019ஆம் ஆண்டில், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் முனீர் ஆர்வம் காட்டியிருந்தார். இதன் விளைவாக இம்ரான், அவரை ISI இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

Advertisement