
மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
மழை தண்ணீர் என்பது நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும்.
மழை பொழிவதால் தான் மக்களுக்கு தங்கு தடை இல்லாமல் தண்ணீர் கிடைக்கிறது, பயிர்களும் மரங்களும் செழித்து வளர்கின்றன. மழை இருப்பதால் தான் நமது பசியும் தாகமும் தங்குதடை இல்லாமல் தீர்க்கிறது.
மழை இல்லையென்றால் மனிதர்களோ பிற உயிர்களோ இந்த கிரகத்தில் உருவாகி இருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.
அப்படிப்பட்ட மழை இல்லாமல் ஒரு கிராமம் இயங்கி வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அமைந்திருக்கும் அல்-ஹுதீப் என்ற கிராமத்தை தான் 'மழையில்லா கிராமம்' என்று அழைக்கிறார்கள்.
பியூனிக்
அந்த கிராமத்தில் மேகங்கள் கூடவும் மழை பெய்யவும் வாய்ப்பில்லை
அல்-ஹுதீப் கிராமம் சமவெளியில் இருந்து கிட்டத்தட்ட 3200 அடி உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் அமைந்துள்ளது.
அந்த கிராமம் மலை உச்சியில் அமைந்திருந்தாலும் பகல் முழுவதும் அங்கு வெப்பம் வாட்டி வதைக்கும் என்றும், ஆனால், இரவானால் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னதான் குளிர் இருந்தாலும், மழை இல்லாததால், அந்த பகுதி வருடம் முழுவதும் வறட்சியாகவே காணப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பொதுவாக, கரு மேகங்கள் கூடினால் மட்டுமே மழை பெய்யும். அதுவும், மேகங்கள் பொதுவாக சமவெளியில் இருந்து 2000 அடி உயரத்திலேயே கூடுகின்றன.
ஆனால், அல்-ஹுதீப் கிராமம் 3200 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளதால், அங்கு மேகங்கள் கூடவும் மழை பெய்யவும் வாய்ப்பில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.