Loading...
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி, தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்ற காவல்துறை
கத்தியால் தாக்க முயன்ற அந்த பெண்ணை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி, தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்ற காவல்துறை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
07:57 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் திங்கள்கிழமை பிற்பகல் கத்தியுடன் புகுந்த பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார். சுமார் 4 நிமிடங்கள் நீடித்த பதற்றமான சூழலுக்குப் பிறகு, கத்தியால் தாக்க முயன்ற அந்த பெண்ணை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மாலை 4:30 மணியளவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பாதசாரிப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. 49 வயதான பாமெலா சிஸ்னெரோஸ் என்ற பெண், எவ்வித காரணமும் இன்றி 20 வினாடி இடைவெளியில் இருவரை வயிற்றில் கத்தியால் குத்தினார். கத்திக்குத்துக்கு உள்ளான 32 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 68 வயது முதியவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார்.

நடவடிக்கை

4 நிமிடப் பதற்றம் & காவல்துறை நடவடிக்கை

கத்தியுடன் தப்பிக்க முயன்ற அந்தப் பெண்ணை NYPD காவலர்கள் சூழ்ந்து கொண்டனர்.

கத்திகளைக் கீழே போடுமாறு காவலர்கள் கூறியபோது, "நான் கத்தியைக் கீழே போட மாட்டேன், உங்களைக் கொல்வதே எனக்கு விருப்பம்" என அந்த பெண் எச்சரித்தார்.

அவரைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் செலுத்திய டேசர் மின்சாரக் அதிர்வுக் கருவிகள் மீது அவர் பொருட்படுத்தாமல், கத்திகளுடன் காவலர்களை நோக்கி முன்னேறினார்.

வேறு வழியின்றி காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே வீழ்த்தப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொலை செய்த பெண்ணுக்கு மனநலப் பாதிப்புகள் இருந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பயங்கரவாதப் பின்னணி எதுவும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானி இந்தச் சம்பவத்திற்குத் தீவிர இரங்கல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT