பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல்
பாகிஸ்தானின் சர்கோதா நகரில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் ஒரு கும்பல் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கிறிஸ்தவர் இஸ்லாம் மதத்தை பற்றியும் கடவுளை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை அந்த கிறிஸ்தவரின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அவரது உடமைகளை சேதப்படுத்தியதோடு, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்தது. சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த கும்பல் அவரது வீட்டையும், ஷூ தொழிற்சாலையையும் எரிப்பது அந்த வீடியோக்களில் நன்றாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த ஷூ தொழிற்சாலைக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஷூக்களை கொள்ளை அடித்து செல்வதும் அந்த வீடியோக்களில் தெரிகிறது.