பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்; 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் பில் கேட்ஸ் குறித்து வெளியாகியுள்ள சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2013-ல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல் குறிப்புகளின்படி, ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பால் பில் கேட்ஸிற்கு பால்வினை நோய் ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் எப்ஸ்டீனிடம் ஆன்டிபயாடிக் மருந்துகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மருந்துகளை தனது மனைவி மெலிண்டாவிற்கு தெரியாமல் அவருக்கு கொடுக்க பில் கேட்ஸ் முயன்றதாக எப்ஸ்டீன் தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டி
மெலிண்டா கேட்ஸின் உருக்கமான பேட்டி
இது குறித்து 'NPR' வானொலிக்கு அளித்த பேட்டியில் மெலிண்டா கேட்ஸ் கூறியதாவது, "இந்த விவரங்கள் வெளியாகும் போதெல்லாம் அது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது. எனது திருமண வாழ்க்கையின் மிக மோசமான நினைவுகளை இவை மீண்டும் கொண்டு வருகின்றன". "இந்த கேள்விகளுக்கு என் முன்னாள் கணவர்தான் பதில் சொல்ல வேண்டும், நான் அல்ல. இந்த புதிய தகவல்கள் எனக்கு ஈடு செய்ய முடியாத சோகத்தை தருகின்றன. அதனால்தான் நான் அந்த திருமண பந்தத்தில் இருந்து வெளியேறினேன்."
மறுப்பு
பில் கேட்ஸ் தரப்பு மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார். "இவை அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் அபத்தமானவை. பில் கேட்ஸுடனான தொடர்பு முறிந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரைப் பழிவாங்க எப்ஸ்டீன் உருவாக்கிய கற்பனைக் கதைகளே இவை," என்று அவர் தெரிவித்துள்ளார்.