Page Loader
ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
மௌய்யில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

எழுதியவர் Sindhuja SM
Aug 12, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா: இந்த வாரம் ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று மௌவாய் மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 11) தெரிவித்தனர். "இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது" என்று மௌவாய் கவுண்டி தெரிவித்துள்ளது. மேலும், 1,418 பேர் அவசரகால வெளியேற்ற முகாம்களில் உள்ளனர். மௌய்யில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். கானாபாலியின் மேற்குப் பகுதியில் மேலும் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஹவாய் தீவின் மிக மோசமான பேரழிவுகளில் இந்த காட்டுத்தீயும் ஒன்றாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ஜகிவ்

சுமார் 14,900 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் 

கடும் காட்டுத்தீ பரவ தொடங்கியதால், வியாழன் அன்று சுமார் 14,900 சுற்றுலா பயணிகள் மௌவாய்யில் இருந்து விமானம் மூலம் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறினர். இறந்தவர்களைத் தேடுவதற்கு சடலத்தை மோப்பம் பிடிக்கும் நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மௌவாய் கவுண்டி மேயர் ரிச்சர்ட் பிஸ்ஸென் ஜூனியர் தெரிவித்துள்ளார். தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று மௌவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீயில் இருந்து தப்பியவர்கள் பலர் தங்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் எதுவும் கேட்கவில்லை என்றும், தயாராவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தீப்பிழம்புகளைப் பார்த்த பிறகு அல்லது வெடிக்கும் சத்தம் கேட்ட பிறகுதான் அவர்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்திருக்கின்றனர்.