டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது?
ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று இன்று டோக்கியோ-ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஓடி கொண்டிருக்கும் போது கடலோர காவல்படை விமானம் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் இருந்த 367 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பயணிகள் விமானம் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பான் ஏர்லைன்ஸ்(ஜேஏஎல்) ஏர்பஸ் விமானம் ஏ350 டோக்கியோ சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு விமானம் மீது மோதியதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர், நிலைமையைக் கட்டுப்படுத்த ஏஜென்சிகளுக்கு அவசர அறையை அமைத்துள்ளார். கடலோர பாதுகாப்பு விமானத்தில் 6 பேர் இருந்தனர். ஆனால், இதுவரை ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார்.