LOADING...
மேற்கு ஆசியாவில் புதிய 'Hexagon' கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்துள்ள 'ஹெக்ஸகன்' திட்டம்

மேற்கு ஆசியாவில் புதிய 'Hexagon' கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
11:31 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இன்று தொடங்குகிறது. இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்துள்ள 'ஹெக்ஸகன்' திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், பிராந்திய நிலைத்தன்மைக்காகவும் ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அச்சினை உருவாக்க நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். இதில் ஆறு முக்கிய தரப்புகளை அவர் ஒருங்கிணைக்க விரும்புகிறார்: 1. இந்தியா 2. அரபு நாடுகள் 3. ஆப்பிரிக்க நாடுகள் 4. கிரீஸ் மற்றும் சைப்ரஸ் 5. ஆசிய நாடுகள் இஸ்ரேல், நெதன்யாகுவின் கூற்றுப்படி, இது வெறும் பொருளாதார வழித்தடம் மட்டுமல்ல, ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளின் "மூலோபாய மற்றும் ராஜதந்திர கூட்டணி" ஆகும்.

சவால்கள்

இந்தியா இணையுமா? - உள்ளிருக்கும் சவால்கள்

இந்தியா இந்தக் கூட்டணியில் இணைவதில் சில சிக்கல்கள் மற்றும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை தடைகள் உள்ளன. அணிசேரா கொள்கை: இந்தியா வரலாற்று ரீதியாக எந்தவொரு ராணுவக் கூட்டமைப்பிலும்(Bloc) சேருவதைத் தவிர்த்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் அரபு நாடுகளுடன் சமமான உறவைப் பேணுவதையே இந்தியா விரும்புகிறது. ஈரான் காரணி: நெதன்யாகுவின் திட்டம் ஈரானுக்கு எதிரான ஒரு கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியா ஈரானுடன் மிக நெருக்கமான எரிசக்தி மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற பிடிவாரண்ட்: நெதன்யாகு குறிப்பிட்ட கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளன. காசா விவகாரத்தில் நெதன்யாகுவிற்கு எதிராக ICC பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த நாடுகளின் நிலைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement