
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் பயணித்தவர்களிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.
"ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்த பிறகு, ஹெலிகாப்டர் பயணிகள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார்.
அதன் பிறகு, அதிபர் திரும்பும் வழியில் அவரது ஹெலிகாப்டர், தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பாவில் விபத்துக்குள்ளானது.
ஈரான்
நாட்டின் நிர்வாகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது எனஉச்ச தலைவர் உறுதி
அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. இது உடனடி கவலையை ஏற்படுத்தியதுடன் பெரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தூண்டியது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமைதியை காக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார். நாட்டின் நிர்வாகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
"எல்லாம் வல்ல இறைவன் எங்கள் அன்பான அதிபரையும் அவரது தோழர்களையும் முழு ஆரோக்கியத்துடன் மீண்டும் தேசத்தின் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.