'இந்தியாவில் 3BHK வீடே கிடைக்கும்': துபாயில் சிறிய அறைக்கு ₹45,000 வாடகை செலுத்தும் இந்தியப் பெண்
செய்தி முன்னோட்டம்
துபாயில் வசித்து வரும் சாக்ஷி என்ற இந்தியப் பெண், தான் தங்கியிருக்கும் ஒரு சிறிய அறைக்காக மாதந்தோறும் சுமார் ₹45,000 வாடகை செலுத்துவதாக தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்சிறிய அறையை சுற்றி காட்டி வீடியோ வெளியிட்டுள்ள சாக்ஷி, இப்பகுதியை ஒரு சிறிய பெட்டி என விவரித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இச்சிறிய அறையில் வாழ்ந்து வந்த அவர், தற்போது அதே அளவிலான மற்றொரு அறைக்கு மாறவுள்ளார். வாடகை தொகையிலும் அறையின் அளவிலும் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், புதிய சுற்றுப்புறம், நல்ல சூழல் மற்றும் புதிய அண்டை வீட்டாருக்காகவே இம்மாற்றத்தை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை
இந்தியா vs துபாய்: வாடகை வேறுபாடு
இந்தியாவில் ₹45,000 வாடகைக்கு பல நகரங்களில் 3 படுக்கையறை, 3 குளியலறை கொண்ட ஒரு பெரிய (3 BHK) பிளாட்டையே வாடகைக்கு எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், துபாயில் தனது சம்பளத்தில் பாதியை இந்த ஒரு சிறிய அறைக்கான வாடகைக்கே செலவிடுவதாகக் ஆதங்கப்பட்டுள்ளார்.
இப்பதிவிற்கு பின்னூட்டம் அளித்துள்ள நெட்டிசன்கள் சிலர், "தொடக்கத்தில் இப்படித்தான் இருக்கும், உங்கள் கனவுகளை விட்டுவிடாதீர்கள்" என்றும், "நான் AED 2,000 கொடுத்து தங்கியிருந்த அறை பேய் படத்து காத்திருப்போர் அறை போல இருந்தது" என்றும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.