
மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்
செய்தி முன்னோட்டம்
2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தியது.
3 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒமிக்ரானின் மாறுபட்ட பிஎப்7 என்னும் கொரோனா தொற்று அதிகளவில் சீனாவில் பரவத் துவங்கியுள்ளது.
ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் இதன் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் இதன் தொற்று பரவிய சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.
சீனாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற சீன அரசு, ஊரடங்கு நடவடிக்கையை தளர்த்தியுள்ளது.
அதே போல், அங்குள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு இனி தகவல் அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அங்குள்ள மக்கள் கொரோனாவோடு இணைந்து வாழ பழகிவிட்டார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.
தொற்று பாதித்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் சீன மக்கள்
கொரோனா நிலை குறித்து கூறும் சீனாவில் உள்ள இந்திய மருத்துவ மாணவர்கள்
இந்நிலையில் சீனாவில் நமது இந்திய மருத்துவ மாணவர்கள் அங்குள்ள நிலை குறித்து சில தகவல்களை அளித்துள்ளனர்.
அதன்படி, ஒரு மருத்துவ மாணவர் கூறுகையில், "சீனாவில் மக்களுக்கு அதன் மேல் இருந்த பயம் போய்விட்டது.
பெரும்பாலானோர் தொற்று பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்கிறார்கள்.
ஊரடங்கு இல்லாததால் தொற்று பரவல் அதிகமாக தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.
மற்றொருவர், "நாங்கள் வழக்கம் பொது இடங்களுக்கு சென்று வருகிறோம். 'முக கவசம்' கட்டாயம் இல்லை என்ற நிலையிலும், தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் அணிகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் "இங்கு தேர்வுகளும் நாம் நினைக்குமாறு வீட்டிலும் எழுதலாம், விரும்பினால் நேராக சென்றும் எழுதலாம் என்னும் நிலை தான் உள்ளது" என்று இன்னொரு மாணவி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.