கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி, சான் பெர்னார்டினோவை(CSUSB) சேர்ந்த மாணவி நிதீஷா கந்துலா மே 25 அன்று காணாமல் போனதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். கந்துலா கடைசியாக லாஸ் ஏஞ்சல்ஸில் காணப்பட்டதாகவும், மே 30 அன்று அவர் காணாமல் போனதாகவும் நேற்று CSUSB காவல்துறைத் தலைவர் ஜான் குட்டிரெஸ் தெரிவித்தார். "நிதீஷா கந்துலாவின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: (909) 537-5165," என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
டொயோட்டா கரோலா காரில் காணாமல் போன நிதீஷா
5'6" உயரம், மற்றும் சுமார் 160 பவுண்டுகள்(72.5 கிலோ) எடை கொண்ட நிதீஷா கந்துலாவுக்கு கருப்பு முடி மற்றும் கருப்பு கண்கள் இருக்கும் என்று அடையாளத்திற்காக போலீஸாரின் எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன போது, கலிபோர்னியா உரிமம் பெற்ற டொயோட்டா கரோலா காரை கந்துலா ஓட்டி சென்றதாக போலீஸ் அறிக்கைகள் மேலும் கூறுகின்றன. "தகவல் தெரிந்தவர்கள் CSUSB காவல் துறையை (909) 538-7777 என்ற எண்ணில் அல்லது LAPD இன் தென்மேற்குப் பிரிவை (213) 485-2582 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று மக்கள் தங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றித் தெரிவிக்குமாறு போலீசார் மக்களிடம் கோரியுள்ளனர்.