3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்
3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன. இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்த உதவும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான முடிவு தற்போது இந்தியாவின் கையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றிய முழு தகவலை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதில் அதிகாரத்துவ தடை அல்லது ஒழுங்குமுறை சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தேவைகளில் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பை பலப்படுத்தும் MQ-98 பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள்
2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கான தாமதத்தைப் பற்றி கேட்டபோது, "நான் அதை சரிபார்க்க வேண்டும்," என்று அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெசிகா லூயிஸ் செய்தியாளர்களிடம் கூறினார். ரகசிய காரணங்களால், இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இருப்பினும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உட்பட அமெரிக்க உயர்மட்டத் தலைமைகளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே டோவல் அண்மையில் சந்தித்தபோது போது இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சந்திப்புகளின் போது, ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க இரு தரப்பினரும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் மட்டுமின்றி, LAC முழுவதும் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த MQ-98 பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.