Loading...
நேபாள வெள்ளப் பேரழிவிற்கு பனி ஏரி உடைப்பு காரணம் அல்ல: ஆய்வில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
வெள்ளத்திற்கு பனிப்பாறை சரிவே காரணம் என்று நேபாள அறிவியலாளர்களின் முதற்கட்ட ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது

நேபாள வெள்ளப் பேரழிவிற்கு பனி ஏரி உடைப்பு காரணம் அல்ல: ஆய்வில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2026
04:33 pm

செய்தி முன்னோட்டம்

ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதேகோசி-திரிசூலி ஆற்றங்கரை பகுதிகளை சீரழித்த பேரழிவு வெள்ளத்திற்கு பனி ஏரி உடைப்போ (GLOF) அல்லது பெருமழையோ காரணம் அல்ல என்றும், பனிப்பாறை சரிவே இதற்கு காரணம் என்றும் நேபாள அறிவியலாளர்களின் முதற்கட்ட ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள சுற்றுசூழல் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, பேரழிவின் பின்னணியில் உள்ள முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆய்வு

ஆய்வின் முக்கிய முடிவுகள்

ரசுவா மாவட்டத்தின் லாங்டாங்-லீரங் மலை பகுதியில், சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் ஆகஸ்ட் 26 காலை 8:37 மணியளவில் மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறைகள் உடைந்து சரிந்துள்ளன.

இந்த சரிவு 2,930 மீட்டர் உயரத்தில் உள்ள லெண்டே ஆற்றில் விழுந்து, பின்னர் போதேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் பெரும் சேறு மற்றும் இடிபாடுகளுடன் கூடிய பேராற்றலாகப் பாய்ந்துள்ளது.

இந்த பனிச்சரிவினால் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; மேலும் 0.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பனிப்பாறை முற்றிலும் உடைந்து சரிந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT