
கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
செய்தி முன்னோட்டம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு இந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி சேதப்படுத்தினர்.
அந்த சுவரொட்டிகளில், "ஜூன் 18ஆம் தேதி நடந்த படுகொலையில் இந்தியாவின் பங்கை கனடா விசாரிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
அந்த சுவரொட்டிகளில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்தார்.
அவர் ஜூன் 18 ஆம் தேதி மாலை குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவரால் கொல்லப்பட்டார்.
டிஜிவுக்
மூன்றாவது முறையாக கனடாவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது
அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றான லக்ஷ்மி நாராயண் கோவில் நேற்று சேதப்படுத்தப்பட்டது.
இந்த வருடம், கனடாவில் உள்ள ஒரு இந்து கோவில் சேதப்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டியால் சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் இந்திய சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு ஏப்ரலில், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள மற்றொரு இந்துக் கோவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்டது.