கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்
கடந்த புதன்கிழமை அன்று பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஓர் வீடியோவை அனுப்பியுள்ளார். அதில் அவர் பட்டு அங்கி அணிந்து சுருட்டு புகைத்துக்கொண்டு, டீனேஜ் காலநிலை ஆர்வலரின் பாலினம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, துன்பெர்க்கை மோசமான கருத்துக்களால் அவமதித்து பேசியுள்ளார். மேலும் காலநிலை ஆர்வலர்கள் பீட்ஸா பெட்டிகளை மறுசுழற்சி செய்வதை குறித்து கேலி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். டேட் சகோதரர்கள் ருமேனியாவிற்கு திரும்புவதற்காக ருமேனியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை விசாரிப்பதற்கான இயக்குனரகம் 9 மாதங்களாக காத்திருந்தனர்.
கிரேட்டாவின் ட்விட்டர் பதிவால் போலீசில் சிக்கிய பாக்ஸர்
அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்ததன் மூலம் அவர்கள் நாட்டில் இருப்பதை கண்டறிந்து, அவர்களது வில்லாவிற்கு படையாக சென்று சோதனை நடத்தி, அவர்களை கைது செய்துள்ளது ருமேனிய போலீஸ். மனித கடத்தல், கற்பழிப்பு மற்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை உருவாக்கியது என்பது போன்ற சந்தேகங்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து, கிரேட்டா துன்பெர்க்கிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கிரேட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் பீட்ஸா பெட்டிகளை மறுசுழற்சி செய்யவில்லை எனில், இது தான் நடக்கும்" என்று பதிவு செய்துள்ளார். ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள ஆண்ட்ரூ டேட்டின் இருப்பிடத்திற்கு அருகில் அவர் அமர்ந்திருக்கும் வீடியோவை வெளியிட்டபிறகே, காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்து அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.