சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம்-2023ம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகணங்கள் என கணிப்பு
2023ம் ஆண்டு நான்கு கிரகணங்கள் ஏற்படவுள்ளது என அறிக்கைகள் கூறுகிறது. முதல் சூரியகிரகணமானது ஏப்ரல்20, 2023 அன்று நிகழும், காலை 7.04 மணிக்கு துவங்கி மதியம் 12.29வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முழு சூரியகிரகணத்தின் உச்சமான இது சுமார் 7 நிமிடங்கள் 32 வினாடிகள் நீடிக்கலாம் என்றும், உலகம் 7.32 நிமிடங்கள் இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை இந்தியாவில் காணமுடியாது. முதல் சந்திர கிரகணம் மே5ம் தேதி ஏற்படும், இந்து நாட்காட்டியின் படி, இரவு 8.45 மணிக்கு துவங்கி அதிகாலை 1மணி வரை இருக்கும். பூமியின் நேரடி நிழல் நிலவுமேல் விழாமல், பக்க நிழல் விழுவதால் ஏற்படும் கிரகணம் இது. ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் இது தென்படுமாம்.
இரண்டாவது சூரிய கிரகணத்தில் சூரியன் முழுமையாக மறையாமல் நடுப்பகுதி மட்டும் மறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14,2023 அன்று மேற்கு ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் காணப்படும். இந்த கிரகணம் பொழுது, சூரியன் முழுமையாக மறையாமல், நடுப்பகுதி மறைந்து சுற்றி வட்ட வளையம் மட்டும் காணப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 2023ன் கடைசி கிரகணம் அக்டோபர்29 அன்று நிகழும். இரண்டாம் சந்திர கிரகணமான இது அதிகாலை 1.06மணிக்கு துவங்கி, மதியம்2.22 மணிக்கு முடியுமாம். இந்த கிரகணம் மட்டும் தான் இந்தியாவில் தென்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது பகுதி கிரகணமாக, அதாவது பாதி சந்திரன் மட்டும் மறைந்து மீளும் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கில் ஒரு கிரகணத்தை தான் இந்தியாவில் காணலாம் என்றாலும், மற்றதை நாசாவின் இணையத்தளத்தில் பார்த்து மகிழலாம்.