இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு இடையில் அதை கொண்டுவர விரும்பவில்லை என்றும் ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் கரேன் டான்பிரைட் நேற்று(பிப் 8) தெரிவித்தார்.
மேலும், உக்ரைனை ஆதரிப்பதற்காக இந்தியா எடுத்த மனிதாபிமான முயற்சிகளையும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு இந்தியா அழைப்புவிடுத்ததையும் டான்பிரைட் பாராட்டி உள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது, உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வந்தன.
அமெரிக்கா
ரஷ்யாவின் எரிசக்தி வளங்கள் 2030க்குள் 50% குறையும்: அமெரிக்கா
குறைந்த விலையில் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. இதை செய்யக்கூடாது என்று அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தன.
ஆனால், அந்த பொருளாதார தடைகளை இந்தியா மீறியது. இந்திய மக்களுக்கு அந்த திட்டம் மிகவும் அவசியமானது என்று இந்தியா தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், 2030க்குள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இருப்பு 50% குறையும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்தியா எடுத்துள்ள அணுகுமுறையுடன் அமெரிக்கா உடன்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், ரஷ்யா நம்பகமான எரிசக்தி சப்ளையர் அல்ல என்று எரிசக்தி வளங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் ஜெஃப்ரி பியாட்டும் முன்பு கூறி இருந்தார்.