NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 
    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 06, 2023
    04:24 pm
    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 
    வங்காளதேசத்தில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    கடுமையான வெப்பம் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நிலக்கரி வாங்க முடியாததால் வங்காளதேசத்தில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த எரிபொருள் பற்றாக்குறையால், வங்காளதேச அரசாங்கத்தால் நடத்தப்படும் பைரா மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே அதன் உற்பத்தியை மே மாதத்தில் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, இன்று மதியம் 12.15 மணிக்கு ஆலை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. நிலக்கரி ஏற்றுமதி வந்ததும் மூன்று வாரங்களுக்குள் உற்பத்தி மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம்" என ஆலையின் மேலாளர் ஷா அப்துல் மவ்லா நேற்று தெரிவித்தார்.

    2/2

    நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது

    வங்காளதேசம் பணமதிப்பிழப்புக்கு எதிராக போராடி வருகிறது. அதன் அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதம் தற்போது சுமார் 9.9 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் $46 பில்லியனாக இருந்த அந்நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தற்போது $30 பில்லியனாக சரிவடைந்துள்ளது. சமீபத்திய வாரங்களில் வங்காளதேசம் முழுவதும் வெப்ப அலை வீசுவதால், மின் தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும், எரிபொருள் பற்றாக்குறையால், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. 10-15 நாட்களுக்குள் நிலைமை சீராகும் என்று அந்நாட்டின் மின்துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் நேற்று 41.1 டிகிரி செல்சியஸ்(106 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியது. இதனால், தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    உலக செய்திகள்
    பங்களாதேஷ்

    உலகம்

    சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம் உலக செய்திகள்
    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் இந்தியா
    சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்  ஜப்பான்
    அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்  உலகம்
    ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது உலகம்
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    அமெரிக்க ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்ற இந்திய-அமெரிக்க சிறுவன்  உலகம்

    பங்களாதேஷ்

    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை
    BANvsPAK: இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது பாகிஸ்தான் ஆசிய கோப்பை
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023