துருக்கி: தன் கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் நன்கொடையாக வழங்கிய நபர்
பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பெரிய நிலநடுக்கத்தில் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பேரழிவுகளுக்கு மத்தியில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் மக்களின் வீடியோக்கள் கொஞ்சம் புத்துணர்ச்சியை வழங்கி வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கடையில் உள்ள அனைத்தையும் நன்கொடையாக வழங்கிய கடை உரிமையாளர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கமான வொர்த் ஃபீட் மூலம் பகிரப்பட்ட கிளிப்பில், ஒரு கடை உரிமையாளர் தன் கடையில் இருந்து எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறுகிறார். மக்களும் பொறுமையாக தங்களுக்கு வேண்டியதை கடை செல்புகளில் இருந்து எடுத்து செல்கின்றனர்.
இறந்த குழதந்தைகளுக்கு அஞ்சலியாக வழங்கப்பட்ட சிவப்பு பலூன்கள்
"எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், இந்தக் கடையில் நான் சம்பாதித்தது போதும்" என்று அந்த நபர் வீடியோவில் கூறுவதாக கூறப்படுகிறது. அங்கிருக்கும் மக்கள் பெரிய பெரிய அட்டை பெட்டிகளில் பொருட்களை எடுத்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களும் துருக்கியில் நடந்து கொண்டிருக்கிறது. துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை நில அதிர்வுகளை ஏற்படுத்தி கொண்டே இருந்தது. இதனால் முதல் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள் கூட மிகவும் சிரம பட்டனர். பலரும் தங்கள் குடும்பங்களை இழந்த பின்னும் மீட்பு பணிகளில் உதவி வந்தனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிலர் இடிந்து கிடக்கும் கட்டிடங்களில் சிவப்பு பலூன்களை கட்டிவிட்டனர். இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தமாக சேர்த்து 46 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.