
5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
செய்தி முன்னோட்டம்
எதிர்க்கட்சியின் புறக்கணிப்பைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்பு, வங்கதேசம் வறுமையால் வாடிய போது அந்நாட்டின் கடுமையான பொருளாதார வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.
ஆனால் அவரது அரசாங்கம் பரவலான மனித உரிமை மீறல்களை செய்ததாவும், இரக்கமற்ற எதிர்க்கட்சி ஒடுக்குமுறையை கையாண்டதாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி போட்டியிட்ட இடங்களில் அந்த கட்சிக்கு எதிராக போட்டியிட யாரும் நிற்கவில்லை.
டவ்ஜ்க
எதிர்க்கட்சி ஏன் தேர்தலை புறக்கணித்தது?
ஆனால் ஹசீனாவின் கட்சி ஒருசில தொகுதிகளில் வேண்டுமென்றே வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஒரு கட்சியே நாட்டை ஆள்கிறது என்ற பேச்சு வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த அணுகுமுறையை ஹசீனாவின் கட்சி கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் மொத்தம் இருக்கும் 300 தொகுதிகளுள் 264 தொகுதிகளில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களிலும், அவரது கூட்டணிக் கட்சியான ஜாதியா கட்சி 9 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
தற்காலிக அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆளும் அரசாங்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி(BNP) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.
இதனையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார்.