LOADING...
"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் படைகளை குவிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது

"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
11:52 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது. மாகாணத்தின் பரந்து விரிந்த புவியியல் அமைப்பு மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் படைகளை குவிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி: கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்கள்: 177 பேர் (இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்). கொல்லப்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள்: 17 பேர்(ராணுவம், கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட). உயிரிழந்த பொதுமக்கள்: 31 பேர் (இதில் 5 பெண்களும் அடங்குவர்). மொத்த உயிரிழப்பு: சுமார் 225 பேர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

குற்றச்சாட்டுகள்

பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டுகள்

பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், பலுசிஸ்தான் மாகாணம் நாட்டின் 40% நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால், அங்கு பாதுகாப்பை உறுதி செய்யப் பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரிவினைவாத குழுக்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் மீண்டும் முன்வைத்துள்ளார். பெட்ரோல் கடத்தல் மூலம் இக்குழுக்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 400 கோடி வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா வன்மையாக மறுத்துள்ளது.

Advertisement