NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை
    உலகம்

    32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை

    32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 01, 2023, 11:58 am 0 நிமிட வாசிப்பு
    32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை
    ஆஸ்திரேலியா போலீசாரால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் சுட்டுக்கொலை

    சிட்னி நகரில் உள்ள ரயில் நிலையத்தில், துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகவும், சட்ட அமலாக்க காவல் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படும், 32 வயது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரால் நேற்று(பிப்.,28) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இளைஞன், தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது, என்று சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டை பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், துப்புரவு பணியாளை தாக்கியபின், அங்கிருந்த காவல்நிலையத்திற்கு சென்ற அகமது, காவல்நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரலையும் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் இந்தியர் சுட்டுக்கொலை

    A 32-year-old Indian national Mohamed Rahmathullah Syed Ahmed was shot dead on Tuesday by Australian Police after he allegedly stabbed a cleaner and threatened police officers with a knife, reported The Sydney Morning Herald

    — ANI (@ANI) March 1, 2023

    போலீஸ் துப்பாக்கிசூட்டில் இறந்த தமிழர்

    அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய போலீஸ் அதிகாரி, அகமதை நோக்கி மூன்று முறை சுட்டதாக அறிக்கை கூறுகிறது. அந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு குண்டுகள், அகமதுவின் மார்பில் தாக்கியது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அகமதுவை, உடனடியாக மருத்துவ உதவியாளர்கள் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அகமது, துப்புரவு பணியாளரை கத்தியால் குத்தியதற்கும், காவல்துறை அதிகாரிகளை தாக்கியதற்கும் ஏதேனும் காரணம் உள்ளதா, அல்லது அகமது மனநலம் பாதிக்க பட்டிருந்தார் என்ற கோணத்திலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அகமது பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார் என்பது கூடுதல் தகவல்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    ஆஸ்திரேலியா

    உலகம்

    இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது எய்ட்ஸ்
    டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதலிடம் : ஸ்டெபி கிராஃப் சாதனையை முறியடித்த ஜோகோவிச் விளையாட்டு
    அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி! செயற்கை நுண்ணறிவு
    உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு உலக செய்திகள்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023