டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்; யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
2024ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக புனே எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர், இந்த காலண்டர் ஆண்டில் 1,000 ரன்களை கடந்து 1,007 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதன் மூலம், 2024 காலண்டர் ஆண்டில் 1,000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்ததோடு, இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்தின் ஜோ ரூட் 2024ஆம் ஆண்டில் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரராக இருப்பதோடு, தற்போது வரை, 1,305 ரன்கள் சேர்த்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2024 காலண்டர் ஆண்டில் 1,000 ரன்கள்
ஜோ ரூட் இந்த ஆண்டில் 14 போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 59.31 என்ற சராசரியை இந்த ரன்களை எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும்.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 10 போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் 59.23 என்ற சராசரியை 1,007 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடங்கும்.
இதற்கிடையே, 2024 காலண்டர் ஆண்டில் 1,000 ரன்களை கடந்துள்ளதன் மூலம், 23 வயதிற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.