Page Loader
மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2023
09:50 am

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தீப்தி ஷர்மாவின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்து, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் தீப்தி ஷர்மா பெற்றார். இதையடுத்து இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் (33) மற்றும் ரிச்சா கோஷ் (44*) ஆகியோர் நிலைத்து நின்று 119 ரன்கள் இலக்கை 18.1 ஓவர்களிலேயே வெற்றியை பெற்று தந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

பிசிசிஐ ட்வீட்