ஜூனியர் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: ஜப்பானை 7-0 என வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
ஜூனியர் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் கொரியாவை 4-1 எனவும், மலேசியாவை 11-1 எனவும் வீழ்த்தியிருந்த இந்திய அணி, ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. மூன்று போட்டிகளில் ஒன்பது புள்ளிகளுடன் இந்திய அணி தற்போது தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவுடன் இந்திய அணி விளையாட உள்ளது.
அதிரடி தொடக்கம்:
முதல் பாதியில் இந்தியாவின் முன்னிலை
ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கிருஷ்ணா சர்மா கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து ஒன்பதாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி சுப்ரியா இரண்டாவது கோலை அடித்தார்.
முதல் காலிறுதி பகுதி முடிவதற்குள், 14-வது நிமிடத்தில் பூர்ணிமா யாதவ் ஒரு ஃபீல்ட் கோல் அடிக்க, இந்திய அணி 3-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது. இ
ரண்டாவது கால்பகுதியில் ஜப்பான் அணி பதில் கோல் அடிக்க முயற்சித்த போதிலும், இந்திய அணியின் தற்காப்பு அதைத் தடுத்ததால் முதல் பாதியில் கோல் மாற்றம் ஏதுமின்றி முடிந்தது.
அபார ஆதிக்கம்
இரண்டாம் பாதியில் தொடர்ந்த ஆதிக்கம்
மூன்றாவது கால்பகுதியிலும் இந்திய அணி தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது.
41-வது மற்றும் 45-வது நிமிடங்களில் கீதா யாதவ் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.
அதைத் தொடர்ந்து 46-வது நிமிடத்தில் பூர்ணிமா தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்ய, இந்திய அணி 6-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் போட்டியின் 50-வது நிமிடத்தில் சனிகா சந்திரகாந்த் மானே ஏழாவது கோலை அடித்தார்.
முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது.