LOADING...
டி20 உலகக் கோப்பை 2026: பயண நெருக்கடியில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள்
பயண நெருக்கடியில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள்

டி20 உலகக் கோப்பை 2026: பயண நெருக்கடியில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
12:48 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவும் தீவிர போர் காரணமாக, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து மையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முடங்கியுள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் எதிரொலித்துள்ளது. டி20 உலகக் கோப்பையின் முக்கிய ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது கொல்கத்தாவில் சிக்கியுள்ளது. துபாய் வழியாக தாயகம் திரும்ப வேண்டிய வீரர்கள், வான்பரப்பு மூடப்பட்டதால் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. "எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்" என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வே அணியும் இதே காரணத்திற்காக இந்தியாவில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பரபரப்பான ஆட்டம்

முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் அதிரடியால் 195/4 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், சஞ்சு சாம்சன் நங்கூரம் பாய்ச்சி ஆடினார். வெறும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டாலும், அவர் விளாசிய 97 ரன்கள் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement