'தப்பு பண்ணிட்டியே குமாரு' : விக்கெட் கீப்பர் செயலால் எழுந்த சிரிப்பலை! வைரலாகும் வீடியோ!
கிரிக்கெட்டில் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் தவறான செயல் நகைச்சுவையாக முடிந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோ கிளிப்பில், உள்ளூர் போட்டியில் ரன் ஓடும்போது பேட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால், பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றபோது ஒருவர் கிரீஸுக்கு வெளியே நடு பிட்சில் இருந்தார். இதனால் அவர் அவுட்டாவது உறுதி என எதிர்பார்த்த நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை கேலி செய்ய அவர் விரக்தியடைந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் உற்சாக மிகுதியில் பெயிலை அகற்றாமல் தனது அணி வீரர்களிடம் செல்ல, இதை சாதகமாக பயன்படுத்தி பேட்டரும் கிரீஸுக்குள் வந்து அம்பயரிடம் முறையிட, அம்பயர் அவுட் இல்லை என அறிவித்து விட்டார்.