LOADING...
அதிரடி அரைசதத்திற்கு பின் 'தளபதி விஜய்' ஸ்டைலில் கொண்டாடிய ஆர்சிபி வீரர் வெங்கடேஷ் ஐயர்!
அரைசதம் அடித்து ஆர்சிபி வீரர் வெங்கடேஷ் ஐயர் தளபதி விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்

அதிரடி அரைசதத்திற்கு பின் 'தளபதி விஜய்' ஸ்டைலில் கொண்டாடிய ஆர்சிபி வீரர் வெங்கடேஷ் ஐயர்!

எழுதியவர் Vasuki
May 17, 2026
08:16 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் விளாசிய 73* ரன்களும், அதற்குப் பிறகு அவர் செய்த 'தளபதி' விஜய் பாணி கொண்டாட்டமும் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் என இருதரப்பினரும் இந்த வீடியோவை 'விஜய் ஃபீவர்' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

மைதானத்தை அதிரவைத்த அதிரடி ஆட்டம்

மின்னல் வேக அரைசதம்

இன்றைய போட்டியில் ரஜத் படிதாருக்குப் பதிலாக 4-ஆவது வீரராகக் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர், பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். லோகி பெர்குசனின் பந்துவீச்சில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை பறக்கவிட்டு, வெறும் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் தனது அரைசதத்தைக் கடந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73* ரன்கள் குவித்து ஆர்சிபி அணி 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட மிக முக்கியக் காரணமாக அமைந்தார்.

மெர்சல் ஸ்டைல் போஸ்

வைரலாகும் 'தளபதி' கொண்டாட்டம்

அரைசதம் அடித்த அடுத்த கணமே வெங்கடேஷ் ஐயர் மைதானத்தில் செய்த கொண்டாட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தென் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் நடிகர் விஜய் மீது தனக்கிருக்கும் தீராத ஈர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்தின் புகழ்பெற்ற சிக்னேச்சர் போஸை (Mersal Pose) அப்படியே மைதானத்தில் செய்துகாட்டினார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நேரத்தில், ஐபிஎல் மைதானத்தில் ஆர்சிபி வீரர் ஒருவர் தளபதி ஸ்டைலில் மாஸ் காட்டியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் என இருதரப்பினரும் இந்த வீடியோவை 'விஜய் ஃபீவர்' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement