
பயிற்சியாளருக்கு மஜாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ!
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள ரவீந்திர கிஷோர் ஷாஹி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர், இளம் வீரர் ஒருவரிடமிருந்து மசாஜ் செய்யும் வீடியோ வைரலானது.
இதையடுத்து பயிற்சியாளர் இடைநீக்கம் செய்யப்பட நிலையில், சம்பவம் குறித்து உத்தரபிரதேச அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு இயக்குனர் டாக்டர் ஆர்.பி.சிங், பயிற்சியாளர் மற்றும் வார்டனாக இருக்கும் அப்துல் அஹத், ஹாஸ்டலுக்குள்ளேயே இளம் கிரிக்கெட் வீரரிடம் இருந்து மசாஜ் செய்துகொண்ட வீடியோ வைரலானதை அறிந்ததும், இடைநீக்க உத்தரவுகளை வழங்கினார்.
உத்தரவின்படி, இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், அஹத் லக்னோவில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விளையாட்டு இயக்குனர், விளையாட்டுத்துறை துணை இயக்குனர் ஆர்.என்.சிங்கை விசாரணை அதிகாரியாக பரிந்துரை செய்துள்ளார். அவர் விரைவில் தனது அறிக்கையை சமர்பிப்பார்.
கிரிக்கெட் பயிற்சியாளர் மசாஜ் வீடியோ
பயிற்சியாளரும் எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கிய வீரர்
இரண்டு நாட்களுக்கு முன் வீடியோ வைரலானதை அடுத்து விளையாட்டு துறை விசாரணையை துவக்கிய நிலையில், அந்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பயிற்சியாளருக்கு எதிராக இளம் வீரர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவதைக் காணக்கூடிய மற்றொரு வீடியோவும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பயிற்சியாளர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், மசாஜ் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அவரை வீட்டிற்கு செல்ல விடவில்லை என்றும் வீரர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் பேட்மிண்டன் விளையாடும் போது விழுந்து முதுகில் காயம் ஏற்பட்டதாக கூறிய பயிற்சியாளர், தனக்கு வலி ஏற்பட்டதால் மசாஜ் செய்யும்படி வீரரிடம் கேட்டதாகவும், அந்த வீடியோவை யார் எடுத்தார்கள், எதற்காக எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.